assalamualaikkum

அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)    சூலூர்  த.மு.மு.க .  மற்றும்  மனிதநேய மக்கள் கட்சி  உங்களை அன்புடன்  வரவேற்கின்றது.      சூலூர்  த.மு.மு.க .  தலைவர் -  S .H .அஹமது ஸாலிஹ் -  செயலாளர் -   M.அன்சாரி -  பொருளாளர் -  K.A.M.அக்பர்அலி  ............  சூலூர்  மனிதநேய மக்கள் கட்சி -  தலைவர் - அஹமது ஸாலிஹ் -  செயலாளர் - அப்துல் கனி -  பொருளாளர் - அக்பர் அலி

Tuesday, 27 September 2011

ம.ம.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
TUESDAY, 27 SEPTEMBER 2011 12:16
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு மற்றும் பரிந்துரை மனுக்கள் செய்திருந்தனர்.

கடந்த வாரம் சென்னை, ஈரோடு, ஓசூர், திருவாரூர், மதுரை, நெல்லை என ஆறு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விண்ணப்ப வேட்பாளர்களுக்கான நேர்காணல்கள் நடைபெற்றது.

அதன்படி இறுதிகட்ட பரிசீலனை செப்.26 அன்றும், செப்.27 அன்று நடைபெற்று வருகிறது. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஹாரூண் ரஷீது, எம். தமிமுன் அன்சாரி, ஜே.எஸ். ரிஃபாயி, குணங்குடி ஆர்.எம். ஹனிபா ஆகியோர் கொண்ட குழு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.

தியாகம், நேர்மை, மக்கள் செல்வாக்கு, நிர்வாகத் திறன், ஆரம்பகால சிறை தியாகங்கள் ஆகியவை முன்னனி அளவுகோல்களாக கணக்கில் கொண்டு இப்பட்டியல் தயாராகியுள்ளது.

புதியவர்களாக இருந்தால் வேறு யாரும் போட்டியிடாமல் ஒருமனதாக விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தால் அவர்களின் மனுக்களும் தகுதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.


, 27 SEPTEMBER 2011 22:18 )