assalamualaikkum

அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)    சூலூர்  த.மு.மு.க .  மற்றும்  மனிதநேய மக்கள் கட்சி  உங்களை அன்புடன்  வரவேற்கின்றது.      சூலூர்  த.மு.மு.க .  தலைவர் -  S .H .அஹமது ஸாலிஹ் -  செயலாளர் -   M.அன்சாரி -  பொருளாளர் -  K.A.M.அக்பர்அலி  ............  சூலூர்  மனிதநேய மக்கள் கட்சி -  தலைவர் - அஹமது ஸாலிஹ் -  செயலாளர் - அப்துல் கனி -  பொருளாளர் - அக்பர் அலி

Saturday 30 April 2011

ததஜ பொதுகூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தை தரைகுறைவான வார்ததைகளால் பேசியதால் பொது மக்கக் ஆவேசம் கோவையில் கலவரம் பதட்டம் போலீஸ் குவிப்பு !


கோவையில் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் காங்கிரஸ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார மோடையில் தமுமுக மற்றும் மமக வை அதுபோல் எஸ் டி பி ஐ தராகுறைவான வார்த்தைகளால் பேசியதை கண்டித்து கோவை பொது மக்கள் ஆவேசம் அடைந்தார்கள். பிறகு 5000க்கு மேற்பட்டறோர்கள். அனைத்து இஸ்லாமியா பொதுமக்கள் ஒன்றுகூடி பிரச்சார மேடை நோக்கி சென்று பேச்சை நிறுத்த சொல்ல பிரச்சனை துவங்கிவிட்டது. அங்கும் இங்கும் கை வைக்க துவங்கிவிட்டார்கள். கலவரம் வெடிக்க தகவல் தெரிந்து அனைத்து இயக்க சகோதரர்கள் பொது மக்கள், ஜமாத்தார்கள்ஒன்று கூடி இவர்களுக்கு ஒரு படம் புகட்ட வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள். ததஜ நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் கோவை கரும்புகடை பகுதிய்ல் 2 மணி நேரம் நடந்த சாலை மறியல் நடந்தது. தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு மற்றும் 1000க்கு மேற்பட்ட போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு வந்து தமுமுக, மமக, மற்றும் எஸ் டி பி ஐ அதுபோல் ஜமாத்தார்களை அழைத்து பேச்சுவார்ததை நடத்தி ததஜவினர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பிறகு கலைந்து சென்றார்கள். முழு செய்திகள் விரைவில்.....


ததஜ பிரச்சார மேடையை நோக்கி .....பொது மக்கள் தாக்க வந்த போது....

ததஜ சேர்ந்த நிர்வாகிகளை பொதுமக்கள் தாக்கியபோது பலத்த கயத்துடன் ததஜ தொண்டர்கள்....



ததஜ நிர்வாகிகள் மற்றும் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வையும் கைது செய்ய தமுமுக, பாப்புலர் ஃபிரண்ட், மமக, எஸ் டி பி ஐ, மற்றும் ஜமாத்தார்கள் பொது மக்கள் சாலை மறியல் நடந்த போது.....



கோவை மாநகர காவல்துறை ஆனையாளர் சைசேந்திரா பாபு அவர்கள் மமக மாவட்ட நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை செய்த போது....

மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
எஸ் டி பி ஐ மாவட்ட தலைவர் அபுதாஹிர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
பாப்புலர் ஃ பிரண்ட் மற்றும் எஸ் டி பி ஐ மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் சாலை மறியல் செய்த போது....

செய்தி, புகைபடம் : கோவை தங்கப்பா

Tuesday 12 April 2011

சேப்பாக்கம்-திருவேல்லிக்கேணி தொகுதிக்கு துணை ராணுவம் வருகை


சேப்பாக்கம்-திருவேல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்து திமுகவின் அராஜகப்போக்கு எல்லை மீறியதால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் சென்னை காவல்துறை கமிஷனர் ஆகியோர்களுக்கு அவசர கோரிக்கை விடப்பட்டது அதில் தொகுதியில் தொடர்ந்து நடைபெற கூடிய பணவினியோகத்தை  முற்றிலுமாக தடுக்க தேர்தல்  ஆணையத்தால் இயலவில்லை தேர்தல் நாளில் வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை எடுக்க வேண்டுமென மமக வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டார். இதனிடையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் மற்றும் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு கட்டங்களாக அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று  (12.04.2011) மாலை 5 மணி அளவில் சேப்பாக்கம்-திருவேல்லிகேணி தொகுதிக்கு துணை ராணுவமும், சிறப்பு அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டு அனைத்து வாக்குசாவடிகளும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரிக்கு இயந்திர துப்பாக்கி ஏந்திய தனி காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் தேர்தலையொட்டி துணை ராணுவம் வந்துள்ள காரணத்தால் தொகுதி மக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளைய தேர்தல் அமைதியான முறையில் நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

கோவை ஜாஹிர் மீது திமுக ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல் SUNDAY, 10 APRIL 2011 12:01 ADMINISTRATOR


ம.ம.கவுக்கு ம.தி.மு.க ஆதரவு-தினமலர்