ம.ம.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
TUESDAY, 27 SEPTEMBER 2011 12:16
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு மற்றும் பரிந்துரை மனுக்கள் செய்திருந்தனர்.
கடந்த வாரம் சென்னை, ஈரோடு, ஓசூர், திருவாரூர், மதுரை, நெல்லை என ஆறு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விண்ணப்ப வேட்பாளர்களுக்கான நேர்காணல்கள் நடைபெற்றது.
அதன்படி இறுதிகட்ட பரிசீலனை செப்.26 அன்றும், செப்.27 அன்று நடைபெற்று வருகிறது. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஹாரூண் ரஷீது, எம். தமிமுன் அன்சாரி, ஜே.எஸ். ரிஃபாயி, குணங்குடி ஆர்.எம். ஹனிபா ஆகியோர் கொண்ட குழு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.
தியாகம், நேர்மை, மக்கள் செல்வாக்கு, நிர்வாகத் திறன், ஆரம்பகால சிறை தியாகங்கள் ஆகியவை முன்னனி அளவுகோல்களாக கணக்கில் கொண்டு இப்பட்டியல் தயாராகியுள்ளது.
புதியவர்களாக இருந்தால் வேறு யாரும் போட்டியிடாமல் ஒருமனதாக விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தால் அவர்களின் மனுக்களும் தகுதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
, 27 SEPTEMBER 2011 22:18 )
assalamualaikkum
Tuesday, 27 September 2011
Saturday, 24 September 2011
Monday, 16 May 2011
என் தோல்விக்காக கலங்காதீர்கள்-எம்.தமிமுன் அன்சாரி
அன்பிற்குரிய நண்பர்களே, சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.
எத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.
தங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை.
சென்னையை மிரட்டும் ரவுடிகளின் துணையோடு, மிகப்பெரிய சினிமா பணக்காரரான ஜெ.அன்பழகன் திமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதே அங்கு பரபரப்பு தொற்றியது. கலைஞரின் தொகுதி மட்டுமல்ல... தயாநிதி மாறனின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதி வேறு. கலைஞர் அன்பழகனை வேட்பாளராக நிறுத்திய போது, இங்கு நானே நிற்பதாக கருதுங்கள் என்று அறிமுகப்படுத்தினார்.
அங்கு திமுகவுக்கு ஏற்படும் தோல்வி, கலைஞரின் குடும்பத்திற்கு ஏற்படும் தோல்வி என கருதப்பட்டதால் தயாநிதி மாறனும், கலைஞரின் மகன் மு.க.தமிழரசும் நேரடியாக எனக்கு எதிராக களப்பணியாற்றினார்கள்.
தினந்தோறும் ரவுடிகளின் பிரச்சனையை சந்தித்தேன். தினந்தோறும் வாக்களர்களுக்கு பணம் வினியோகித்த அநீதிக்கு எதிராக போராடினேன். ஒரு கட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரை இரண்டு முறை நேரில் சந்தித்து பண வினியோகத்தை தடுத்து நிறுத்துமாறு முறையிட்டேன். அவரை நேரில் இருமுறை சந்தித்த ஒரே வேட்பாளர் நான் மட்டுமே. ஆயினும் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை.
எனினும் மனம் தளராமல் போராடினேன். நமக்கு பலஹீனமாக இருந்த ஒரு தொகுதி, 15 நாள் உழைப்பில் தமிழமே பேசப்படக்கூடிய ஒரு நட்சத்திர தொகுதியாக மாற்றினோம். நம் உழைப்பையும், பிரச்சாரத்தையும் மீடியாக்கள் வியந்து போற்றின. ரவுடிகளையும், பணக்கார சக்திகளையும் எதிர்த்து போராடுவதாக பாராட்டின. நவீன வடிவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தேன்.
தேர்தல் களத்தில் நான் ஒரு கதாநாயகன் போல் மக்களால் வர்ணிக்கப்பட்டேன். செல்வி. ஜெயலலிதா அம்மையார் அவர்களே நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
ஆனாலும், கடைசி இரண்டு நாட்களில் கடுமையாக வினியோகிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளும், தங்கக் காசுகளும், குடிசை மக்களையும், மீனவ மக்களையும் விலைக்கு வாங்கிவிட்டது என்பதை வாக்குகள் எண்ணப்படும் போது அறிந்தேன்; அதிர்ந்தேன். எந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டேனோ அந்த மக்கள் என்னை கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள்.
குடிக்காதீர்கள்; பொருளாதாரத்தை சேமியுங்கள்; பின்ளைகளைப் படிக்க வையுங்கள் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கொள்கை பிரச்சாரத்தை எந்த மக்களிடம் அக்கறையுடன் செய்தேனோ, அந்த மக்கள் தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் பேரிழப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள் என்பதை நினைத்து வருந்துகிறேன்.
கூட்டணிக் கட்சியொன்றைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலரும் தயாநிதி மாறனிடம் விலை போனதை அறிந்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.
சென்னையில் நானும், கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமியும்தான் அனல் பறக்கும் பிரச்சாரத்தை கடும் வெயிலில் தீவிரமாக மேற்கொண்டோம். வீடு வீடாக, வீதி வீதியாக ஏறி இறங்கினோம்.
நாங்கள் இருவருமே மீடியாக்களால் பாராட்டப் பெற்றோம். ஆனாலும் எங்கள் இருவரையும் அலைகளையும் தாண்டி பணம் ஜெயித்து விட்டது.
இன்று அறிவார்ந்த மக்களிடமும், மனசாட்சிமிக்க வாக்காளர்களிடமும் நாங்கள் இரக்கத்திற்குரிய நபர்களாக அனுதாப அலையில் நின்று கொண்டிருக்கிறோம். வெற்றியால் கிடைத்திருக்கும் ஆதரவை விட, தோல்விக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஆதரவு பன்மடங்குகளாக இருக்கிறது.
என் தோல்வியால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதை ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களில் பார்க்க முடிகிறது. என்னை சந்தித்து அழும் சகோதரர்களிடமும், அலைபேசி வழியாக பதறும் சகோதரர்களிடமும் அந்த உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. என் மீது பற்றுக்கொண்ட மக்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் நெகிழ்கிறேன்.
போரில் வெற்றி பெறும்போது எதிர்பாராவிதமாக முக்கிய தளபதி கொல்லப்படுவது யுத்தங்களில் சகஜமானது. அதுபோல்தான் இதுவும்! நான் சட்டமன்றத்திற்குப் போனால் பாராளுமன்றத்தில் வைகோ முழங்கியது போல், சட்டமன்றங்களில் ரஹ்மான் கான், பரிதி இளம்வழுதி முழங்கியது போல் செயல்பட்டிருக்க முடியுமே... அது முடியாமல் போய்விட்டதே என ஒரு சகோதரர் குமுறினார். கவலை வேண்டாம்.
அருமை தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அருமை நண்பர் அஸ்லம் பாஷாவும் பெற்ற வெற்றி நமக்கு புதுத்தெம்பை அளித்திருக்கிறது. சமுதாயத்திற்குப் புது நம்பிக்கையை தந்திருக்கிறது. அதை நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதை நினைக்கும் போது, மனம் மகிழ்கிறது.
என் தொகுதி மக்களில் சிலர் செய்த வரலாற்றுத் தவறுக்காக யாரும் கலங்க வேண்டாம். எத்தனையோ களங்கள் நமக்காக காத்திருக்கிறது. இதைவிட சிறப்பான இன்னொன்றை இறைவன் நமக்கு வழங்குவான். 15 கோடிகளை செலவு செய்த எதிர்தரப்புக்கு முன்னால் சில லட்சங்களை செலவு செய்து சில ஆயிரம் ஓட்டுகளில் மட்டுமே தோற்றிருக்கிறோம்.
ஆனால், வல்ல இறைவனின் நாட்டம் இதுதான் எனும்போது இதற்குமேல் இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
என் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் சூழப்பட்டிருக்கிறது. எனது பொது வாழ்வு பயணங்களில் நான் பல காயங்களைப் பட்டிருக்கிறேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் நான் பல அதிர்வுகளை சந்தித்து மெல்ல மீண்டும் வந்திருக்கும்போது, எதிர்பாராத இத்தோல்வியால் நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன் என்பதை மறைக்க முடியவில்லை. ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது, அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையும் மறைக்க விரும்பவில்லை.
அன்று இரவு பத்திரிக்கையாளர்கள் என்னை தொடர்புகொண்டு, இத்தொகுதியில் ‘‘இவர்களை’’ எதிர்த்து உங்களைத் தவிர வேறு யார் நின்றிருந்தாலும், தயாநிதி மாறன் டெபாசிட் வாங்க விட்டிருக்க மாட்டார் என்று கூறினார்கள்.
நமது உழைப்பு அங்கு குறுக்கு வழியில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அதையும் மீறி எனக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்த 54,988 வாக்காளர்களுக்கும் என் சார்பிலும், கட்சியின் சார்பிலும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும், சொந்தக் காசை செலவு செய்து, பசியோடும் & பட்டினியோடும் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்த என் உயிருக்கினிய மனிதநேய சொந்தங்களுக்கும், தாய்க்கழக உறவுகளுக்கும் என் மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பின்னணியில் உழைத்த அறிவுஜீவிகள், மாணவர்கள், இளைஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், உலகமெங்கும் எனக்காக துவா செய்த நல்லுள்ளங்களுக்கும், என் அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னாலும் எனக்காக துடித்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெற்றி பெற்றிருந்தால் கிடைக்கும் ஆதரவை விட, நான் தோற்ற பிறகு எனக்கு கிடைத்திருக்கும் ஆதுரவும், அனுதாபமும் அளவிட முடியாததாக இருக்கிறது. வயதில் இளையவனாகிய என் மீது சமுதாய மக்கள் வைத்திருக்கும் அன்பை எண்ணி உண்மையில் கண் கலங்குகிறேன்.
என் உரையில் உந்தப்பட்ட மாணவர் தம்பிகள் தமிழகமெங்கும் அழுகின்ற செய்திகள் என்னை உறைய வைக்கிறது. நமது இயக்க குடும்பங்களில் பெண்களெல்லாம் கூட எனக்காக பதறும் செய்திகள் என்னை விசும்ப வைக்கிறது. பல சகோதரர்கள் என்னை நேரில் சந்திக்க பல ஊர்களிலிருந்து வந்தவண்ணம் உள்ளனர்.
மீண்டும் கூறுகிறேன். கவலைகள் இருந்தாலும், அடுத்த களத்துக்கு நம்மை தயார்படுத்துவோம். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித்தந்த ஜார்ஜ் வாஷிங்டனையே அதே மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தார்கள். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை அடுத்த தேர்தலில் அதே மக்கள் தோல்வியைச் செய்தார்கள்.
காமராஜர், அண்ணா போன்றவர்களே தோற்றிருக்கும்போது எனது தோல்வி சாதாரணமானது. நாம் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோமே தவிர நேரிய வழியில் அல்ல.
குறுக்கு வழியில் வெல்வதை விட, நேர்மையான வழியில் தோற்பது உயர்வானது.
வெளிநாடுகளில் வாழும் நண்பர்களும், சகோதரர்களும் இதை எளிதாக எடுத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புமாறு வேண்டுகிறேன்.
உங்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றும் வேறொரு சிறந்த வாய்ப்பை இறைவன் எனக்கு நல்குவான். தற்போது மன அமைதியும், சிறிய ஓய்வும் எனக்கு தேவைப்படுகிறது.
ஆயினும் எந்தவிதத்திலும் சமுதாயப் பணி தடைபடாது. முன்னிலும் அதிகமாக உழைப்பேன். நமது கட்சி வெற்றி பெற்ற ஒரு போரில் காயம்பட்ட ஒரு வீரனாக இருக்கிறேனே தவிர, ஓடி ஒளிந்தவனாக இருக்க மாட்டேன்.
எனக்கு ஒரே ஆறுதல், நம் சமுதாய மக்கள் வாழுமிடங்களில் 99 சதவீத ஆதரவு கிடைத்ததுதான். இது மமகவுக்கான அற்புதமான களம் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.
கலைஞர் குடும்பத்தையும், ரவுடிகளையும், அதிரவைத்த ஒரு தமுமுக தொண்டன், மமக ஊழியன் என்ற பெருமிதத்தோடு என் அடுத்தகட்டப் பயணம் தொடரும். இன்ஷாஅல்லாஹ்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறுதி வெற்றி நமது அணிக்கே!
அல்லாஹ் நமக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களை அணுகாது (அல்குர்ஆன் 9:51)
மூமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:200)
அன்புடன்
எம். தமிமுன் அன்சாரி

மனிதநேய மக்கள் கட்சி வெற்றி. இறைவனுக்கு நன்றி (Video)
மனிதநேய மக்கள் கட்சி வெற்றி. இறைவனுக்கு நன்றி.
உரை. பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.ஏல்.ஏ தமுமுக தலைமையகத்தில் ஆற்றிய உரை.
உரை. பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.ஏல்.ஏ தமுமுக தலைமையகத்தில் ஆற்றிய உரை.
Friday, 13 May 2011
ஆம்பூரில் ம.ம.க வெற்றி

மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி (அல்ஹம்துலில்லாஹ்)
ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.அஸ்லம் பாஷா பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.
2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும் 2007 ல் மாவட்ட செயலாளராகவும்இ 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ்இ உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளார்
Saturday, 30 April 2011
ததஜ பொதுகூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தை தரைகுறைவான வார்ததைகளால் பேசியதால் பொது மக்கக் ஆவேசம் கோவையில் கலவரம் பதட்டம் போலீஸ் குவிப்பு !
கோவையில் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் காங்கிரஸ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார மோடையில் தமுமுக மற்றும் மமக வை அதுபோல் எஸ் டி பி ஐ தராகுறைவான வார்த்தைகளால் பேசியதை கண்டித்து கோவை பொது மக்கள் ஆவேசம் அடைந்தார்கள். பிறகு 5000க்கு மேற்பட்டறோர்கள். அனைத்து இஸ்லாமியா பொதுமக்கள் ஒன்றுகூடி பிரச்சார மேடை நோக்கி சென்று பேச்சை நிறுத்த சொல்ல பிரச்சனை துவங்கிவிட்டது. அங்கும் இங்கும் கை வைக்க துவங்கிவிட்டார்கள். கலவரம் வெடிக்க தகவல் தெரிந்து அனைத்து இயக்க சகோதரர்கள் பொது மக்கள், ஜமாத்தார்கள்ஒன்று கூடி இவர்களுக்கு ஒரு படம் புகட்ட வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள். ததஜ நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் கோவை கரும்புகடை பகுதிய்ல் 2 மணி நேரம் நடந்த சாலை மறியல் நடந்தது. தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு மற்றும் 1000க்கு மேற்பட்ட போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு வந்து தமுமுக, மமக, மற்றும் எஸ் டி பி ஐ அதுபோல் ஜமாத்தார்களை அழைத்து பேச்சுவார்ததை நடத்தி ததஜவினர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பிறகு கலைந்து சென்றார்கள். முழு செய்திகள் விரைவில்.....

Tuesday, 12 April 2011
சேப்பாக்கம்-திருவேல்லிக்கேணி தொகுதிக்கு துணை ராணுவம் வருகை
சேப்பாக்கம்-திருவேல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்து திமுகவின் அராஜகப்போக்கு எல்லை மீறியதால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் சென்னை காவல்துறை கமிஷனர் ஆகியோர்களுக்கு அவசர கோரிக்கை விடப்பட்டது அதில் தொகுதியில் தொடர்ந்து நடைபெற கூடிய பணவினியோகத்தை முற்றிலுமாக தடுக்க தேர்தல் ஆணையத்தால் இயலவில்லை தேர்தல் நாளில் வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை எடுக்க வேண்டுமென மமக வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டார். இதனிடையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் மற்றும் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு கட்டங்களாக அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று (12.04.2011) மாலை 5 மணி அளவில் சேப்பாக்கம்-திருவேல்லிகேணி தொகுதிக்கு துணை ராணுவமும், சிறப்பு அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டு அனைத்து வாக்குசாவடிகளும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரிக்கு இயந்திர துப்பாக்கி ஏந்திய தனி காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் தேர்தலையொட்டி துணை ராணுவம் வந்துள்ள காரணத்தால் தொகுதி மக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளைய தேர்தல் அமைதியான முறையில் நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
Tuesday, 29 March 2011
Monday, 21 March 2011
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, 2)ஆம்பூர் 3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர் போட்டியிடுவார்கள்.
-ம.ம.க தலைமையகம்
-ம.ம.க தலைமையகம்
Monday, 14 March 2011
ஒரு நாள் வரும்!

ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்
உன்னை குளிப்பாட்டுவார்கள்.
நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .

Monday, 7 March 2011
சிறையில் அடைத்தார் கலைஞர்-நக்கீரனில் தமுமுக தலைவர் பேட்டி

அ.தி.மு.க கூட்டணியில் இணைந்திருக்கும் த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கிறது. த.மு.மு.க.தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விடம், ""முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?'' என்று கேட்டபோது,
""தி.மு.க.வின் தொடக்க காலத்திலிருந்து அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் முஸ்லிம்கள். 1967-ல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. அரியணையில் ஏறியதற்குக் காரணம் முஸ்லிம்கள்தான். இது வரலாறு. முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. இதன் நியாயத்தை உணர்ந்து 70-களில் 12 சதவிகித இட ஒதுக்கீட்டை கேரள அரசு சட்டமாக்கியது. ஆனால்... தமிழகத்தில் போராடிக்கொண்டேதான் இருந்தோம். தி.மு.க. அரசில் இது கண்டுகொள்ளப்படவேயில்லை. தற்போது 3.5 சதவிகிதம் கொடுத்திருக்கிறார் கலைஞர்.
இது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப அமையவில்லை. அதனால் இந்த இட ஒதுக்கீட்டால் பெரிய அளவில் முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த 3.5 சதவிகிதம் கூட முஸ்லிம்கள் மீதான அக்கறை யால் அல்ல. தேர்தலுக்காக கொடுக்கப்பட்டிருக் கிறது.
எங்கள் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தானே தவிர அ.தி.மு.க. ஆட்சியில் அல்ல.
உதாரணத்திற்கு... பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ல் ஒவ்வொரு வருடமும் பேரணி, போராட்டம் நடத்து வது வழக்கம். ஆனா போராட் டத்திற்கு இரண்டு நாட் களுக்கு முன்பிருந்தே "முன் னெச்சரிக்கை' என்று காரணம் காட்டி த.மு.மு.க. நிர்வாகிகள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடு வார் கலைஞர். இப்படி ஒரு அடக்குமுறை ஜெய லலிதா ஆட்சியில் ஒரு போதும் நடந்த தில்லை.
தி.மு.க. ஆட்சி யில்தான் கோவை கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் உயிர் களும் உடைமைகளும் சூறை யாடப்பட்டன.
காவிகளும் காக்கிகளும் கண்மூடித்தனமாக முஸ்லிம் களைத் தாக்கினர். இதனை தடுக்காத தி.மு.க. அரசு, "குண்டு வைத்தார்கள்' என்று அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்து மகிழ்ந்தது. இன்னமும் அப்பாவி முஸ்லிம் கள் சிறையில்தான் துன்பம் அனுபவித்து வருகிறார்கள்.
மோடிக்கு ஜெயலலிதா விருந்து கொடுத்தார்னுதான் தி.மு.க. குற்றம் சொல்லும். ஆனா, மோடியின் தலைவரான வாஜ்பாய் அரசில் அமைச்சரவை சுகம் கண்டவர்கள் யார்? தி.மு.க.தானே?
முஸ்லிம் கட்சிகளுக்கான தனித்தன்மையை தி.மு.க. எப்போதுமே தந்ததில்லை. தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சியை, தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவாகத்தான் கலைஞர் வைத்திருக்கிறார். அதனால்தான் முஸ்லிம் கட்சியை தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி நிறைவேற்றிக் கொள்கிறார் கலைஞர். தனிச்சின்னம் வாய்ப்பு தரப்படாததால், முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். இதுவா முஸ்லிம்களை பாதுகாக்கும் முறை? ஆனா, இந்த நிலை அ.தி.மு.க.வில் இல்லை.
கடந்த காலங்களிலும் சரி... தற்போதும் சரி... முஸ்லிம் கட்சி களை தனி சின்னத்தில் போட்டியிட அனுமதித்தவர்... அனுமதிக்கிற வர் ஜெயலலிதாதான். இப்படி நிறைய சொல்ல முடியும்'' என்கிறார் வலிமையான குரலில் ஜவாஹி ருல்லா.

நன்றி - நக்கீரன் வாரமிருமுறை
Saturday, 5 March 2011

M.H. Jawahirullah, convenor Manithaneya Makkal Katchi with AIADMK general secretary Jayalalithaa at her Poes Garden residence on Sunday.
The AIADMK on Sunday entered into an electoral understanding with the Manithaneya Makkal Katchi (MMK) by allotting three seats to the party.
M.H. Jawahirullah, convenor of the MMK, the political wing of the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK), met AIADMK general secretary Jayalalithaa at her Poes Garden residence and signed the agreement for seat-sharing.
“We have decided to contest on our own symbol and we will soon approach the Election Commission in this regard,” Mr. Jawahirullah told The Hindu.
He said MMK would also contest one seat in Puducherry as part of the AIADMK alliance and the agreement for the same would be signed later.
Asked whether he was happy with the allocation of three seats, Mr. Jawahirullah said he had no complaints because Ms. Jayalalithaa was keen on cobbling together a mega alliance.
“Our objective is to defeat the corrupt DMK government driven only by nepotism,” he said.
Mr. Jawahirullah was accompanied by TMMK president S. Hyder Ali, MMK general secretary P. Abdul Samad, treasurer S.S. Haroon Rashid and others.
Earlier in the day, CPI leaders led by its State secretary D. Pandian held talks with the AIADMK's three- member committee on seat-sharing.
“The talks went on smoothly and it is for the AIADMK leadership to finalise the agreement,” Mr. Pandian said.
மங்கலத்தில் 93வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஒன்றியம் சார்பில் 93-வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 20 அன்று நடைபெற்றது. இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.

Wednesday, 2 March 2011
பாண்டாரவாடை ஊராட்சித் தலைவர் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி
தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு
நடைபெற்ற இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிப்
பெற்றார். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்பு சின்னத்தில் இத்தேர்தலில்
போட்டியிட்ட கமருஸ்ஸமான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி
வேட்பாளர் அசோகனை 254 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தார்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி பல தரப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெரும்
அளவில் பெற்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி அடைந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

Sunday, 27 February 2011
மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?
அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி
20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.
கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?
பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது.
“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12&ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.
நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.
இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.
அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?
பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?
பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.
கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..
பதில்: உண்மைதான்! 1991&க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.
அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.
ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில்¢மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..
பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.
எந்த பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.
கூடுதல் தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...
பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள் பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.
முன்பு 2001ல் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம் கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப் பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின் எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான் பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும் சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.
இதையெல்லாம் ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச் சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...
பதில்: அன்றைய அரசியல் சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&ல் திமுக கூட்டணியில் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.
வட மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை வெளிக்காட்டியது.
அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன் கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல், அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான் என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.
அந்த நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான் நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம் பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறோம்.
இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)
அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)
கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?
பதில்: அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும். சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள் தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச் சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள்: & இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.
அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே தொலைந்தார்கள்?
ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.
ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.
ஒரு வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும் என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.
நமக்கு சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும், ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
தேர்தல் நிதி தாரிர்
சமுதாய கண்மணிகளே...! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நீங்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
எழுச்சியும், மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கிய பொதுக்குழுவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் எல்லோரும் ஒன்றுகூடி, ஒருவரையொருவர் சந்தித்து, ஆரத்தழுவி, நலம் விசாரித்து சிலமணி நேரங்கள் ஒரு குடும்பமாய் கூடி நின்ற அந்த தருணங்களை விவரிக்காமல் இருக்க முடியாது!

அல்ஹம்துலில்லாஹ்...
நமது பொதுக்குழு என்பது நம் பேரியக்கத்தின் திருவிழாவாகும். நமது பலம் பன்மடங்குகளாகப் பெருகி, ஆயிரக்கணக்கான புதிய கிளைகள் உருவாகியிருப்பதால் இப்போதெல்லாம் நமது பொதுக்குழுக்கேற்ற மண்டபங்கள் எங்கும் அமையப் பெறுவதில்லை.
அதனாலேயே திடல்களைக் கண்டறிந்து அங்கே பந்தலை அமைத்து பொதுக்குழுவை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனால் பெரும் செலவுகள் ஏற்படுகிறது என்றாலும், உங்களையெல்லாம் ஒன்றாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறதே எனும்போது, சிரமங்களும் செலவுகளும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.
பொதுக்குழுவில் எங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையா? என ஏராளமான சகோதரர்கள் எழுப்பிய ஏக்கம் நிறைந்த கேள்விகளும், எங்களை இனிய சங்கடங்களுக்கு உள்ளாக்கியதையும் இந்நேரத்தில் நினைவுகூர வேண்டியிருக் கிறது.
அவர்களுக்கெல்லாம் ‘அனுமதி இல்லை’ என்ற இரண்டு வார்த்தைகளை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் கனத்த இதயத்தோடு மறுத்தோம்.
எல்லோரும் நமது கொள்கை தங்கங்கள்தான். இயக்கத்தில் முழுநேரமாய் பணியாற்றியவர்கள்தான். மறுக்க முடியாது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும், மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டவர்களையும் மட்டுமே கொண்ட பொதுக்குழுவின் விதிகளை தளர்த்தினால், அதனால் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதையும் தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
சிறப்பு அழைப்பாளர்களாகவாவது அனுமதியளியுங்கள் என்றும் பலர் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கும் ஒரு எண்ணிக்கை வரையறை உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, பொதுக்குழுவுக்கு வரமுடியாத, அல்லது அனுமதி மறுக்கப்பட்ட நமது தங்க மனமும், கொள்கை உரமும் கொண்ட சகோதரர்கள் இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இனி அடுத்த பொதுக் குழுவில் பங்கேற்கும் வகையில், நிர்வாக ரீதியாக இடம்பெறும் வகையில் தங்களின் இயக்க ஈடுபாட்டை இன்னும் கூடுதலாக செய்திட வேண்டும் என இந்நேரத்தில் மிகுந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
கண்மணிகளே...!
நாடே எதிர்பார்க்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடைபெறவிருக்கிறது. மார்ச் 1 முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. நமது மனிதநேய மக்கள் கட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இத்தருணம் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக இருக்கிறது.
சமுதாய சிந்தனையாளர்கள், சகோதர அமைப்புகள், உலமாக்கள், ஜமாஅத்தார்கள் என பலரும் நமது சட்டமன்ற நுழைவை பெரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். எப்படியும் இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்களாக நுழைந்துவிட வேண்டும் என பிரார்த்தித்த வண்ணம் உள்ளனர்.
பலர் நமது கூட்டணி நிலைப்பாட்டை நேரடியாக ஆதரிக்கிறார்கள். இன்னும் பலர், நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; எப்படியாவது உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் வெற்றிவாகை சூடுங்கள் என வாழ்த்துகிறார்கள்.
நாம் முன்பே எடுத்த தேர்தல் நிலைப் பாடு, நமது பிரச்சாரப் பணிகளை எளிமையாக்கியிருக்கிறது என்பதை உணர்கி றோம். வெளிநாடுகளில் வாழும் நமது சகோதரர்களும் இதுபோன்ற அனுபவத்தையே செய்திகளாக நமக்குத் தந்தவண்ணம் உள்ளனர்.
கண்மணிகளே...!
நம்மைத் தோற்கடிக்க வீறுகொண்டு வேலை செய்வோம் என ஒரு சிறு கூட்டம் சபதம் செய்திருப்பதாக அறிகிறோம். ஒரு சிறு கூட்டம் என்பதைவிட, அவர்களை வழிநடத்தும் ஒருவரின் நிலைப்பாடுதான் அது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்மைத் தோற்கடிக்க வேண்டும் என பாஜக, இந்துமுன்னணி போன்றவர்கள் சபதம் ஏற்றால் அது எதிர்பார்க்கக் கூடியது. ஆனால், தங்களையும் ‘கலிமா’ சொன்னவர்கள் என கூறிக்கொள்பவர்கள் இத்தகைய நிலைப் பாடுகளை மேற்கொள்வதுதான் பரிதாபத்துக் குரியதாக இருக்கிறது.
அவர்கள் நம்மை எதிர்ப்பதே நமக்கு கூடுதல் பலம் என்பதை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இவர்களது நிலைப்பாட்டை நமது சமுதாய மக்கள் நிராகரிக்கப் போவது உறுதி என்பதை இன்ஷாஅல்லாஹ் தேர்தல் களம் உணர்த்தப் போகிறது. தூய எண்ணத்தோடு களமாடும் நமக்கு அல்லாஹ்வின் பேருதவி இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ஒவ்வொரு தொழுகையிலும் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.
கண்மணிகளே...!
தேர்தலில் நாம் எத்தனைத் தொகுதிகளை பெறப் போகிறோம்? என அனைவரும் கேட்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக தலைமையுடன் பேசி வருகிறோம். தொகுதி எண்ணிக்கைகளில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். நாம் நினைத்த தைவிட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாக வும் கிடைக்கலாம். நமது கூட்டணிக்கு பலம் வாய்ந்த புதிய கட்சிகள் எல்லாம் வரும் நிலையில் நாம் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது. அரசியல் ராஜதந்திர த்துடன் நாம் அணுக வேண்டியுள்ளது.
கண்மணிகளே...!
நாம் தேர்ந்தெடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் சில தொகுதிகளின் பெயர்களை பொதுக்குழுவில் அறிவித்தோம். அங்கெல்லாம் தொகுதி எழுச்சிப் பொதுக்கூட்டங்கள், கொடியேற்று நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைத்தல், சுவர்களை முன்பதிவு செய்தல் என வேலைகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
இச்செய்திகள் எல்லாம் நமக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனால், ஒன்றை மட்டும் நினைக்கும் போது விழிகள் உறங்க மறுக்கிறது. நுரையீரல் பெருமூச்சை வெளிப்படுத்துகிறது. இதயம் பதற்றமடைகிறது. அது என்ன...? தேர்தல் செலவுக்கு என்ன செய்யப் போகிறோம்? என்பதுதான் அது. தலைமை நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எழுப்பப்படும் கவலைக்குரிய கேள்வி இது. நேர்மையாளர்களுக்கு எப்போதும் பொருளாதாரப் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும் என்பது நமது அனுபவ உண்மை.
திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவினர் தொடங்கிவைத்த பணநாயக விளையாட்டு ஜனநாயகத்தை உடைத்திருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால்தான் ஓட்டு என்ற நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் நம்மைப் போன்ற ஜனநாயக சக்திகளை ஒழித்துவிட்டு ஒரு கட்சி சர்வாதிகார முறையை தமிழகத்தில் கொண்டு வருவதுதான் அவர்களது திட்டம்!
அவர்களுக்கென்ன... பணத்துக்கா பஞ்சம்? ஸ்பெக்ட்ரம் மூலம் பல்லாயிரம் கோடி; பாலங்கள், சாலைகள் மூலம் பல்லாயிரம் கோடி; இப்படி திரும்பிய பக்கமெல்லாம் கோடி, கோடியாய் சுருட்டிய பல லட்சம் கோடிகள் வைக்க இடமின்றி குவிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களது கூட்டணியில் உரசல்களும், குழிபறிப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கும் சூழலில் அவர்கள் நம்பியிருப்பது ஊழல் பணத்தைத்தான். தேர்தலின் இறுதி நாட்களில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாகப் பணம் கொடுத்தாவது; 50 அல்லது 60 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என துடிக்கிறார்கள். அவர்கள் தோல்வியடையப் போவது உறுதி தான் எனினும், ‘கௌரவமாக’ தோற்க வேண்டும் என்பதற்காக வெறிகொண்டு பணத்தை வாரி இறைப்பார்கள்.
அதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அதற்காக, நாம் போட்டியிடும் தொகுதிகளில் நாம் முறைகேடான வழிகளில் செலவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், செலவு செய்ய வேண்டிய முக்கிய நிகழ்வுகளான விளம்பரம் அமைத்தல், பிரச்சாரம் செய்தல், வாகன செலவு, கூட்டணி கட்சியினரின் அடிப்படை வேலைகளுக்கான செலவுகள், பூத் கமிட்டிக்கான ஏற்பாட்டு செலவு, மீடியாக்களுக்கான செலவுகள் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவையெல்லாம் தவிர்க்க முடியாத செலவுகள்.
கண்மணிகளே...!
நமது பேரியக்கம் சாமான்ய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்கள் மட்டுமே நமது பட்டாளத்தில் இருக்கிறார்கள்.
நமது ஒவ்வொரு செயல்பாடுகளிலும், வெற்றிகளிலும் பொதுமக்களிடமிருந்து திரட்டும் நன்கொடைதான் பின்னணியாக இருக்கிறது.
நமக்கு டாட்டாக்களையும், அம்பானிகளையும் தெரியாது. ஆலைகள் நடத்தும் பெரு முதலாளிகளையும் தெரியாது. அன்னிய நாடுகளில் நிதிபெறக் கூடாது என்பதைக் கொள்கையாக வைத்திருப்பவர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கும் இந்திய சொந்தங்களிடமிருந்து மட்டுமே நன்கொடை களை பெறக்கூடியவர்கள் என்பதெல்லாம் ஊர் அறிந்த உண்மைகள்.
இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் நிதியைத் திரட்ட வேண்டியது மிகமிக அவசரமான பணியாகும். தேர்தல் நேரத்தில் செலவுக்கு பணமிருந்தால் மட்டுமே நிம்மதியாக, சிந்தனை சிதறாமல் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த முடியும்.
எனவே, பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை ஒருமாத காலத்தை தேர்தல் நிதி வசூலிக்கும் காலமாக வரையறை செய்து எல்லோரும் மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்காகப் பணியாற்றும் நமக்கு, மக்களிடமிருந்து பெறும் நிதிதான¢தோணியாகவும், ஏணியாகவும் இருக்க வேண்டும்.
கிளைகள், வார்டுகள், வட்டங்கள் என அடிப்படை நிர்வாக அமைப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் சார்பில் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் தேர்தல் நிதி சேகரிக்க வேண்டும். இவர்களை மிஞ்சும் விதத்தில் நகரம், மாநகரம், பகுதி, ஒன்றியம் சார்பில் ஒருமடங்கு கூடுதல் நிதி சேகரிக்க வேண்டும். இவர்களோடு மாவட்ட நிர்வாகங்கள் போட்டிபோட்டு நிதி சேகரிக்க வேண்டும்.
சொந்தத் தொழில் நடத்துபவர்களிடமும் செல்வந்தர்களிடமும், அவர்களது சக்திக்கேற்ப 10 நாள் வருவாயைக் கேட்கலாம். அரசு ஊழியர்களிடம் தங்களின் ஒரு வார ஊதியத்தைக் கேட்கலாம். நல்ல வேலைகளில் உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் இருப் பவர்களிடம் ஐந்து நாள் ஊதியத்தைக் கேட்கலாம். நடுத்தர வர்க்க பாட்டாளிகளிடம் இரண்டு நாள் ஊதியத்தைக் கேட்கலாம். தினக்கூலிகளிடம் அவர்கள் விரும்பினால், அவர்கள் தரக்கூடிய ஒரு சிறிய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், யாரையும் நிர்பந்தப்படுத்துவது கூடாது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. மனம் கசந்து யாரும் நமக்கு தேர்தல் நிதியளிக்க வேண்டியதில்லை.
நமது நிதிநிலை அறிந்து, சமுதாயத்தின் அரசியல் நிலை புரிந்து, மனமுவந்து யார் யார் தருகிறார்களோ அவர்களிடம் மட்டுமே தேர்தல் நிதியைத் திரட்டுங்கள். வீடு வீடாக செல்லுங்கள். வீதி வீதியாக செல்லுங்கள். உண்டியல் குலுக்கியாவது நிதி திரட்டுங்கள்.
நீங்கள் திரட்டும் ஒவ்வொரு ரூபாயும் சமுதாயத்தின் அரசியல் தலைநிமிர்வுக்கு, ஹலாலான முறையில் செலவு செய்யப்படும் என்பதை இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது எண்ணங்களையும், எதிர்பார்ப்பு களையும் அந்த வல்ல இறைவன் பொருந்திக் கொண்டு, வெற்றியை நல்க பிரார்த்திப்போம்.!
அன்புடன்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
Subscribe to:
Posts (Atom)