assalamualaikkum

அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)    சூலூர்  த.மு.மு.க .  மற்றும்  மனிதநேய மக்கள் கட்சி  உங்களை அன்புடன்  வரவேற்கின்றது.      சூலூர்  த.மு.மு.க .  தலைவர் -  S .H .அஹமது ஸாலிஹ் -  செயலாளர் -   M.அன்சாரி -  பொருளாளர் -  K.A.M.அக்பர்அலி  ............  சூலூர்  மனிதநேய மக்கள் கட்சி -  தலைவர் - அஹமது ஸாலிஹ் -  செயலாளர் - அப்துல் கனி -  பொருளாளர் - அக்பர் அலி

Tuesday 12 April 2011

சேப்பாக்கம்-திருவேல்லிக்கேணி தொகுதிக்கு துணை ராணுவம் வருகை


சேப்பாக்கம்-திருவேல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்து திமுகவின் அராஜகப்போக்கு எல்லை மீறியதால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் சென்னை காவல்துறை கமிஷனர் ஆகியோர்களுக்கு அவசர கோரிக்கை விடப்பட்டது அதில் தொகுதியில் தொடர்ந்து நடைபெற கூடிய பணவினியோகத்தை  முற்றிலுமாக தடுக்க தேர்தல்  ஆணையத்தால் இயலவில்லை தேர்தல் நாளில் வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை எடுக்க வேண்டுமென மமக வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டார். இதனிடையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் மற்றும் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு கட்டங்களாக அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று  (12.04.2011) மாலை 5 மணி அளவில் சேப்பாக்கம்-திருவேல்லிகேணி தொகுதிக்கு துணை ராணுவமும், சிறப்பு அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டு அனைத்து வாக்குசாவடிகளும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரிக்கு இயந்திர துப்பாக்கி ஏந்திய தனி காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் தேர்தலையொட்டி துணை ராணுவம் வந்துள்ள காரணத்தால் தொகுதி மக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளைய தேர்தல் அமைதியான முறையில் நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment